• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வாக்கு எனும் பேராயுதம் மாபெரும் மாநாடு..,

ByK Kaliraj

Mar 1, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார்.

நேதாஜி சுபாஷ் சேனையின் தென் மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் டோல் லிட்டர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏன்டிஏ கூட்டணி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் எதிர்கோட்டை சுப்பிரமணியன் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் திமுகவினை வீட்டுக்கு அனுப்பும் நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் என் டி ஏ கூட்டணியுடன் சேர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் முழு ஒத்துழைப்புடன் உழைத்து திமுகவினையும் ஸ்டாலினையும் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார். மீண்டும் எடப்பாடி யார் ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடிப்படை பொருட்களின் விலை உயர்வால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கார்ப்பரேட் மற்றும் கனிம விளைக்கு திமுக துணை போவதாலும் தமிழ்நாடு சீர் கட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையை மாற்ற நேதாஜி சுபாஷ் சேனை அதிமுகவின் துணையுடன் திமுகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மீண்டும் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்றும் இதுவே நேதாஜி சுபாஷ் சேனையின் முழு வேலையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசீனையும் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் வழங்கினார். இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.