நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் தாவரவியல் பூங்கா,படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது உதகை.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது,

உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. மேலும் கடும் உறைப்பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட இன்று அதிகரித்துள்ளதால் அதிகாலை விவசாயம் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் படைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
- சிறு விளையாட்டு மைதானங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்..,

- வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி சங்க அபிஷேகம்..,

- சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது..,

- ரூ. 26 கோடியில் துண்டில் வளைவுப் பாலம் திறப்பு..,

- அரசு மேல்நிலைப் பள்ளியில்நெகிழி ஒழிப்பு உறுதிமொழி..,

- கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை மாடு பத்திரமாக மீட்பு..,

- சந்தன மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,

- கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

- மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம்..,

- போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமூன்று பேர் கைது…





