• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

எம் வி எம் கலைவாணி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,

ByKalamegam Viswanathan

Feb 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து கண்காட்சியிணை தொடங்கி வைத்தார்.

தொழிலதிபர் எம் மணி முத்தையா பள்ளி நிர்வாகி வள்ளி மயில் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர் முதல்வர் தீபா ராகினி அனைவரையும் வரவேற்றார்.

கண்காட்சியில்பள்ளி மாணவர்கள் ராக்கெட் வடிவமைத்து அதன் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினர். மேலும் அனைத்து மத கடவுள்கள் குறித்தும், சிறுதானிய உணவு பாரம்பரிய உணவு பழக்கம், விவசாய முறை, எளிய முறையில் கற்பித்தல், போன்றவை பற்றி விளக்கிக் கூறினர். ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தாங்கள் கண்டுபிடித்தவைகள் குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர் ஒரு சில மாணவ மாணவிகள் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவுகள் குறித்த கண்காட்சிகளை வைத்திருந்தனர்

மேலும் கேப்பங்கூல் கம்மங்கூழ் கேப்பை ரொட்டி சுண்டல் தட்டப்பயிறு போன்றவைகள் தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். இவற்றை பார்த்த பொதுமக்கள் வியந்து மாணவர்களை பாராட்டினர். சிறந்த படைப்புகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. சோழவந்தான் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்த்து அவர்களை பாராட்டி சென்றனர்.