• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஏலக்காய் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: ஒருவர் கைது..,

ByS.Ariyanayagam

Feb 28, 2026

திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி, போடியை சேர்ந்த முத்துப்பாண்டி(26) இவர் திண்டுக்கல் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி அதை போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் போடியை சேர்ந்த சத்யபிரியன் மற்றும் மனைவி அபி, அப்பா கமலக்கண்ணன் ஆகியோர் ஏலக்காய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

வங்கி மூலம் ரூ.3,08,31,900 பெற்றுக் கொண்டு ஏலக்காய் வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பணத்தைத் திருப்பி கேட்டதற்கு சத்யபிரியன் உள்ளிட்டோர் அடியாட்களை வைத்து ரோட்டில் செல்லும்போது லாரியை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மாவட்ட S.P. பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி.குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்யப்பிரியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.