• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஜல்லி கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

ByKalamegam Viswanathan

Feb 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்த நிலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

மேலும் சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் ஜல்லி கற்களை நெடுஞ்சாலைத்துறை மூலம் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த ஜல்லி கற்கலால் வாகனங்களில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனி விவேகானந்தா கல்லூரி தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் ஆகிய பகுதிகளில் சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதாக கூறி சேதமடைந்த சாலையில் பள்ளங்களை தோண்டி அதில் ஜல்லி கற்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்த கற்கள் கொட்டப்பட்டுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது ஜல்லி கற்கள் சிதறி செல்வதால் அருகில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையில் பள்ளங்களில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை சரி செய்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பல இடங்களில் சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.