• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா..,

ByS. SRIDHAR

Feb 27, 2026

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணி புரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் எழுது பொருளும் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக மரம் வளர்த்த 12 மாணவ மாணவிகளை தேர்வு செய்து.பசுமை தங்கம். என்ற விருதை மாணவ மாணவிகளுக்கு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தப்பட்டார்கள். அதேபோல் இந்த ஆண்டும் 66 மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளும் நோட்டு எழுதுகோலும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வண்ணம் உண்டியலும் அதில் நாணயங்களும் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் திருமதி கவிதா திரு அரங்கநாதன் மன்றம் சுப்பையா எழுத்தாளர் ம.மு.கண்ணன் எழுத்தாளர் சிவா ஆனந்தன் திருமதி சுசிலா தேவி திருமதி சரோஜா சாய் சக்தி ஐஏஎஸ் அகாடமி லோகநாதன் அறந்தாங்கி செந்தில் திருக்கட்டளை ராமேஷ் சுந்தரம் சிவசுப்பிரமணியன் பகவான் டீ கடை சிவகுமார் அனைவரையும் தலைமை ஆசிரியர் திரு ஜே குழந்தை சாமி மற்றும் ஆசிரியர் திரு ஆல்பர்ட் லாசர் திருமதி இசபெல்லா அனைவரையும் வரவேற்றார் விழா முடிவில் செந்தில் நன்றி கூறினார்.