இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை ஸ்டார் குரு சேரிடபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்பொழுது மாணவர்கள் கல்வியை ஒழுக்கத்துடன் கற்க வேண்டும், தேர்வுகளை மாணவர்கள் பயமின்றி தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதி வெற்றி பெற வாழ்த்தினார். மேலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்பு அனைத்து மாணவர்களுக்கு நோட், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், சார்பனர் வழங்கினார்.

எழுமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் ஆனந்த் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் அறிவழகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முருகேசன் நன்றியுரை கூறினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் விழாவை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மீராதேவி மாணவர்களை வாழ்த்தினார்கள்.







