• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம் ..,

ByT. Balasubramaniyam

Feb 26, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 150 க்கும் மேற்பட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் அலுவலர்கள் , தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இத்தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு,கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். தொடர் காத்திருப்பு போராட்டத்தில்
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% குறைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்து மீண்டும் அதனை 25% நிர்ணயம் செய்ய வேண்டும்,நில அளவைத் துறையில் வெளி முகமை ஒப்பந்த அடிப்படையில் ஆன பணி நியமனங்களை கைவிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவை தளர்த்தி அவர்களின் வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.’அரசு தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.