மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தை கடந்த 21 ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த பாலத்தின் இரு புறங்களிலும் தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

இதில் தமுக்கம் மைதானம் பகுதியில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வது போல் புகைப்படம் வரையப்பட்டுள்ளது.
அதில் தங்க குதிரை மேல் கள்ளழகர் புகைப்படம் இல்லாமல் வெறும் தங்க குதிரை மட்டுமே வரையப்பட்டுள்ளது.
இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், மதுரையில் அடையாளமாக உள்ள அருள்மிகு கள்ளழகரை அவமதிக்கும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது எனவும்.
ஜாதி மத வேதங்கள் இன்றி பல லட்சம் மக்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழாவை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டதை கண்டிக்கும் வகையில் இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு அளிக்க சென்றனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இந்து முன்னணி நிர்வாகிகள் இடம் புகார் மனுவை பெறாமல் இதனை நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் சென்று கொடுங்கள் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி மேலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கள்ளழகரை அவமதிக்கரை கண்டிக்கும் வகையில் மனு அளிக்க சென்றவர்களை அவமதித்த மாநகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் அரசபாண்டி தெரிவித்துள்ளார்.






