• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சசிகலாவை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சுவரொட்டிகள்..,

ByKalamegam Viswanathan

Feb 23, 2026

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஜெயலலிதாவின் தோழி V.K சசிகலாகொண்டாடுவது வழக்கம் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் அருகேயுள்ள கோட்டைமேடுபகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திடலில் நாளை நடைபெறும் ( பிப்ரவரி 24ஆம் தேதி ) அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையம் தொடங்கி சிந்தாமணி சுற்றுச்சாலை விரகனூர் சிவகங்கை, ராமநாதபுரம் பசும்பொன் வரை
அதிமுக சார்பில் வரவேற்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 78வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள்

“தீமை எனும் சூழ்ச்சியில் வீழ்த்த நினைப்பவர்களை தீயில் எழும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து சூழ்ச்சியை வீழ்த்த வருக! வெல்க!!”
என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

“துரோகம் மிரலும் நெஞ்சுரமே! நாளைய தமிழகமே!! புரட்சி தாய் சின்னம்மா அவர்களே!!! வருக! வருக!!”

“2026 இல் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வருகை தரும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களே வருக! வருக!!”

“கடைக்கோடி அண்ணாதிமுக தொண்டர்களின் நம்பிக்கையே வருக! வருக!!”

இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.