உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னையில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில்,உலகத் தாய் மொழி நாள் பேரணி மற்றும் கவன ஈர்ப்புப் பெருந்திரள் முழக்கம் ஓய்வுபெற்ற துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணிம் தலைமையில் நடைபெற்றது. கோவை சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் பேரணியைத் துவக்கிவைத்தார்.

தொடர்ந்து நிகழ்வில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க ஆதிலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் தங்கராசு, தமிழர் நீதிக்கட்சி தலைவர் சு. பா. இளவரசன், இந்தியத் தமிழர் இயக்கத் தலைவர் ஆவடிக் குமார், தமிழர் இயக்கத் தலைவர் தோழர். தியாகு, தமிழ்ச் சங்கத் தலைவர் வி. ஜி. பி. பன்னீர்தாஸ், க. நம்பியார் மற்றும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

துணை ஒருங்கிணைப்பாளர் செ. துரைசாமி, அமைப்புச் செயலாளர் புலவர் பூ. அ. ரவீந்திரன், பொருளாளர் கவிஞர். இல. மணி, செயற்பாட்டாளர்கள் அர. பழனிசாமி, செந்தமிழ் லி. கனகசுப்பிரமணி ஆகியோர் நிகழ்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.







