• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி..,

ByK Kaliraj

Feb 15, 2026

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.

சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுபோன்ற ஆபத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியைகளுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது. தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எதுபோன்ற தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்,

எந்த உடல் பாகங்களில் தாக்குதல் நடத்தினால் எதிரிகளை வீழ்த்தி அங்கிருந்து தப்புவது என்பது போன்ற செயல் விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் ஆபத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பயிற்சியில் பங்கேற்ற மாணவியர் தெரிவித்துள்ளனர்.