• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அறிவியல் கண்காட்சியில் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு..,

Byமுகமதி

Feb 12, 2026

திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் எங் சைன்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இயக்கத்தால் 4 மாநிலங்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளியின் மாணவிகள் ப.வேதிகாஸ்ரீ, த.யு.ஹரிணிவேதா ஆகியோரின் படைப்பான மின்னணுக் கழிவு மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற படைப்பு மூன்றாம் இடம் பிடித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்று வந்தனர்.

அதனைத்தொடர்ந்து மூன்றாம் இடம் பிடித்த மாணவிகள் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் அவர்களை சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர். அதனைத்தொடர்ந்து மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் பொன்னாடை போர்த்தி எதிர்காலத்தில் பல்வேறு அறிவியல் படைப்புகளை உருவாக்கி சாதனை புரிய பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் புனிதா, வழிகாட்டி ஆசிரியர் ஜான்சி, ஆசிரியர்கள் ராஜா, கெஜலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.