அரியலூர் அண்ணா சிலை அருகே, தொழிலாளர் களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆபத்தான அணுமின் சக்தி உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

மின் விநியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்ப டைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025- ஐ திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் விலைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தொமுக மாவட்டச் செயலாளர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சவுந்தர் ராஜன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் எஸ்.ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொடர்ந்து,தொழிற்சங்க கூட்டமைப்பினர் அண்ணா சிலையிலிருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்று, தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் 170 பேர்கள் ஆண்கள் 150 பேர்கள் என 320 பேரை கைது செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. மாரியம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திர சேகர்,நகர காங் கிரஸ் தலைவர் மா.மு.சிவகுமார்,தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி கள் டி.சேகர்,வி மதி யழகன், பிவி அன்பழகன்,கே.கனகராஜ்,ஆர். சங்கர், ஆர்.ரவீந்திரன், ஆர். சிற்றம்பலம், கே கிருஷ்ணன்,ஆர் தன்சிங், ரெ.நல்லுசாமி, து.பாண்டியன், டி.விஜயகுமார்,கே சுரேஷ்குமார்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






