• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி மறியல் போராட்டம்..,

விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும், பிற மாநிலங்களைப் போலவும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும். அதிகமான பாதிப்புஉள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வழங்க nண்டும். படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.நாகராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் என்.டி.நடராஜன் பேசினார். மேலும் இதில் மாவட்ட பொருளாளர் கே.அரோக்கியராஜ், மாவட்ட நிர்வாகிகள் சுப்புராஜ்,ரேணுகாதேவி, ஸ்ரீதேவி, சரவணன், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேறறனர்.

பின்பு மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 147 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்பு மாலையில் விடுவித்தனர்.