• Thu. Feb 12th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சிகள்..,

ByKalamegam Viswanathan

Feb 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் செக்யூரிட்டி கார்ட்ஸ் அனைவருக்கும் தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்தும் முறை மற்றும் முதலுதவி பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையில் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் செக்யூரிட்டி கார்ட்ஸ்ஆக பணிபுரியும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் கள்பெற்று சென்றனர்.