• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திமுகவில் பி.டி.செல்வகுமாருக்கு கட்சியில் புதிய பதவி..,

திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவரும், தென்குமரி கல்விக்கழக செயலாளருமான பி.டி.செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவருக்கு மாநில திமுக வர்த்தக அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு கட்சி நிர்வாகிகள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.