• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கிப்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு..,

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு”. நாகர்கோவிலில் கிம்ஸ் மருத்துவ மனை சார்பில் எதிர் வரும் பெப்ரவரி 22_ம்தேதி நடக்கவுள்ளது.

பொது மக்கள் மத்தியில் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை
எழுத்தறிவு அதிகம் பெற்ற குமரி மாவட்டத்தில் பரவலாக்கும் வகையில்
மூன்று நிலைகளில் அதாவது 20.கி.மீ., 10.கி.மீ,5.கி.மீ_(பொழுது போக்கு ஓட்டம் என்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பந்தயம் நிகழ்வில் பங்கேற்க இந்த ஆண்டு 1,100_க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர்,அதில் பெண்கள் 300_பேர் என்பது பெருமை மிக்க பதிவு என தெரிவித்தார். கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர்.எஸ்.ஐ. சஹதுல்லா. மேலும் அவர் தெரிவித்தது.எண்ணிக்கை 1,100_பேர்களுடன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்ததுடன்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் 51_பேருக்கு முதல் கட்டமாக கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் ரூ.3லட்சம் பெருமான மருத்துவ காப்பீடு அட்டையை கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில், எங்கள் நிறுவனம் இலவசமாக வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறோம் என நிர்வாகம் இயக்குநர்
டாக்டர்.எஸ்.ஐ.சஹத்துல்லா தெரிவித்ததுடன். மாரத்தான் ஓட்டம் பந்தயம் பங்கேற்பாளர்களுக்கான டி சர்ட் மற்றும் அதன் இலட்சண்ணியத்தையும் வெளியிட்டார்.

பத்திரிகையாளர்ளுக்கான மருத்துவ காப்பீட்டு முதல் அட்டையை நாகர்கோவிலில் பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் டென்னீசன், சிந்து, இக்னேஷியஸ் ஆகியோர் உடன் அனைத்து செய்தியாளர்களும் பெற்று கொண்டனர்.

நாகர்கோவிலில் பிரஸ் கிளப் சார்பாக செய்தியாளர் இக்னேஷியஸ் குழுமம் தலைவர், மேலாண்மை இயக்குநர் டாக்டர்.எஸ்.ஐ.சஹத்துல்லாவுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் டாக்டர்கள் தாணு, கிரிபேஷ்ஹரிகரன், கிரண், தீபக், நவீன் மற்றும் நிர்வாக, செயல் திட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.