• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே ரூ. 5 லட்சம் மோசடி: ஒருவர் கைது..,

ByS.Ariyanayagam

Feb 10, 2026

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி,போடியை சோ்ந்த சீனிவாசன் (42). இவரிடம் மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

ரூ.5 லட்சம் முன் பணமாகத் தர வேண்டும் என்று திண்டுக்கல் நேருஜிநகா் பகுதிக்கு வரவழைத்து ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு ரூ.50 லட்சம் தருவதாக ஏமாற்றியது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் அழகேசன்(46), முருகபாண்டி(40) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இது குறித்து நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன், நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான திண்டுக்கல், NGO-காலனி, CTO- காலனியை சேர்ந்த முகமதுஅன்சார்(37) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.