• Wed. Feb 11th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குடும்பத்தினரை காதல் கொள்ளும் காதல் திரைப்படம்-மைலாஞ்சி..,

ByRadhakrishnan Thangaraj

Feb 10, 2026

இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் மைலாஞ்சி படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது . எம்.பி சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொருளாளர் பி எம் ராமராஜ்.
அக்ரி சுப்பிரமணியம் மைலாஞ்சி பட தயாரிப்பாளர் டாக்டர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்படம் குறித்து விளக்க உரையாற்றினர்.

தயாரிப்பாளரும் மனநல மருத்துவருமான அர்ஜுனன் மைலாஞ்சி என்பதன் அர்த்தம் மருதாணி என்றும் பொருளாகும் காதலை மென்மையாகவும் தன்மை கொண்டு செல்லும் காதல் குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய குடும்பத்தை காதல் கொள்ளும் காதல் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரன் உதவியாளராக இருந்த பி சி ஸ்ரீராமனின் உதவியாளர் செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் கதாநாயக ஸ்ரீ ராம் கார்த்திக்கும் கதாநாயகியாக கிரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் முனீஸ் காந்த் சிங்கம்புலி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற 13ஆம் தேதி தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 150 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது இதன் போஸ்டர்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்பு பட தயாரிப்பாளர் அர்ஜுனன் வெளியிட்டார்.