• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

புதிய குடிநீர் தொட்டி அமைக்க மக்கள் கோரிக்கை..,

ByK Kaliraj

Feb 9, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சியில் ஒண்டிவீரன் காலணி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து இதனை பராமரிக்கப்படாததால் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதனால் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீருக்காக அடுத்த கிராமங்களுக்கு தண்ணீர் எடுக்க செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.