• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி முகாம்..,

ByK Kaliraj

Feb 9, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் TEXCO நிறுவனத்தை சேர்ந்த தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இப்பயிற்சியை நிலைய அதிகாரி செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியின் போது தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ அணைப்பான் பயன்படுத்தும் முறைகள் மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து செய்முறை விளக்கங்களுடன் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் உபகரணங்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட TEXCO பாதுகாவலர்களுக்கு விருதுநகர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலகம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுபோன்று ஏழாயிரம் பண்ணையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீ பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட தனியார் பாதுகாவலர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களையும், உடைமைகளையும், காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.