• Mon. Feb 9th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை- ஐ பெரியசாமி பேட்டி..,

ByVasanth Siddharthan

Feb 8, 2026

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்திக்க பேசும் போது,

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்காததற்கு திமுக நிர்வாகம் சரியில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு

நிர்வாகத்திற்கு பேர் போன இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். நிர்வாகத்திற்கு தமிழ்நாட்டிலே தலை சிறந்த நிர்வாகமும் மாநிலத்தினுடைய வளர்ச்சியிலும் முதன்மையான மாநிலமாக இருப்பது தமிழகம்.
இதை நாங்கள் சொல்லவில்லை மோடியினுடைய அரசே ஒத்துக்கொண்டு இருக்கிறது.

எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்பதை உங்களுக்கே தெரியும். நீங்க பத்திரிக்கையாளர் எல்லாரையும் பார்க்கிறீங்க. அந்த அளவுக்கு இன்றைக்கு தமிழகம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

இப்ப வந்து குரூப் 2 தேர்வுல ஏதோ ஒரு காரணத்தை எனக்கு தெரியாது.
காலையில இருந்து நான் சுற்றுப்பயணத்துல இருக்கேன்.
நான் இப்ப அஞ்சு மணிக்கு தான் வந்தேன்.
ஆக மொத்தம் அங்க இருக்கக்கூடிய தேர்வாணயத்துக்குன்னு ஒரு தலைவர் இருக்காரு.
அவங்க வந்து ஒரு தன்னாட்சி நிறுவனம் மாதிரி செயல்படுறாங்க.

அரசு ஏற்கனவே அதை அதை நிர்வகிக்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
என்ன காரணத்தினால் என்பதை தெரிந்தால் நான் சொல்லலாம்.

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது திமுக பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியது குறித்த கேள்விக்கு

அதாவதுங்க தனிப்பட்டவர்களுடைய கருத்துக்கு பதில் சொல்வது எனக்கு அது சரியா படல.

காரணம் என்னன்னா நான் வந்து ஒரு கட்சியினுடைய மந்திரியா இருக்கேன். அவர் எம்பியா (திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர்
சச்சிதானந்தம்)
இருக்காரு. அவருக்கு ஒரு இயக்கத்திற்கு அவங்க வந்து இடசாரி இயக்கத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில அவருக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கு.

நாங்க எல்லாம் கட்டுப்பாடோடு வளர்ந்தவர்கள். கருத்து கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும்.

அவர் தினம் ஒரு அறிக்கை கொடுப்பது அது வந்து எங்களுக்கு அதுல உடன்பாடு இல்லை.

அந்த இயக்கத்தினுடைய தலைவர்கள் சொன்னால் அதற்கு நாங்கள் பதில் சொல்லலாம்.

தமிழக அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு

நான் என்ன சொல்றேன் கடன் நீங்க வந்து உங்களுக்கு தெரியாத விஷயம் இல்ல. ஏற்கனவே கடந்த காலங்களில் இருக்கக்கூடிய அரசு நிறைய 5 லட்சம் கோடி கடன் வச்சிட்டு போனாங்க.

அதுக்கு வட்டியே ஒரு ஆண்டிற்கு எவ்வளவுங்கிறத நீங்க கணக்கீடு பண்ணனும். ஒரு 36000 கோடி குறையாம வரும். கடந்த கால ஆட்சியில் அவர்கள் வைத்துவிட்டு சென்ற கடனுக்கே வட்டி செலுத்துவதே இன்றைக்கு 40000 கோடி வரைக்கும் வரும்.

ஏன்னா எனக்கு புள்ளி விவரமா சொல்ல என்கிட்ட புள்ளி விவரங்கள் இல்லை. இருந்தாலும் தொடர்ச்சியாக நம்ம வந்து மாநில அரசினுடைய நிர்வாகத்துல மூலதனங்களை உருவாக்குவதற்கும் விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும் ஏழை எளிய மக்களுக்கு சமூக நல திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். ஏன்னா முதியோர் ஓய்வுதியம் உங்களுக்கே தெரியும்.

திண்டுக்கல் மாவட்டத்துல கடந்த வாரம் 10000 பேருக்கு நம்ம முதியோர் உதயம் தயவு கூர்ந்து யாரும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்துல இதே மாவட்டத்துல நான் கிட்டத்தட்ட 1லட்சத்தி 40000 பேருக்கு எல்லா தொகுதியிலும் கொடுத்துருக்கேன்.

ஒரு தொகுதிக்கு 20000 பேர் கொடுத்துருக்கேன்.

அவங்க ஆட்சி வந்த உடனே அதிமுக ஆட்சி வந்த உடனே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நான் வந்து என் மாவட்டத்துல பூரா முதியோர் உதத்தை கொடுத்துட்டேன்.

தமிழ்நாடு பூரா கொடுத்துட்டேன்.

அவங்க கட்சிக்காரங்களுக்கு கொடுத்துட்டேன்னு எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.

9 லட்சம் 9 லட்சம் முதியோர் உதவி தொகை நிறுத்திய பெருமை அவங்க அதிமுக ஆட்சிக்கு உண்டு.

ஏன்னா அவங்க இறந்தவங்கள பத்தி நான் பேச விரும்பல.

60 வயதை தாண்டியவர்களுக்கெல்லாம் வந்துகிட்டு இருக்க பணம் நின்னா சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க?

அப்பா இந்த சாப்பாட்ட வச்சு கேக்காதிங்க.

பொண்டியா இருப்பாங்க. பையன் இருக்க மாட்டான். சாப்பாடு நிறைய இருக்கு. மகன் இருக்க மாட்டான். எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கக்கூடிய இருக்கக்கூடிய வயதான வயது முதிர்ந்தவர்கள் ஏதோ அந்த பணத்தை வச்சு மாதம் மாதம் வாங்கி அதை சாப்பிட்டுட்டு இருந்தாங்க. நல்லா சந்தோஷமா இருந்தாங்க.

அதை நிறுத்துன பின்னாடி இன்னும் அதை சரி கட்டுறதுக்கு இப்பதான் சரி கட்டிட்டு இருக்கோம். இப்ப 1லட்சத்தி 10 ஆயிரம் பேருக்கு இப்ப கொடுத்துருக்கோம். ஒரு வாரத்துக்கு முன்னாடி 1லட்சத்தி 8000 பேருக்கு கொடுத்துருக்கோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்துள்ளோம்.

https://we.tl/t-3i9S3oKXa8