புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.

மேலும் இவ்வாலயத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று சனிக்கிழமை தினத்தில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீசனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள சனி பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்ததாகவும் அதிமுக கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆள வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தமிழக வெற்றி கழகம் வருகையால் அதிமுக கூட்டணிக்கு வாக்கு வங்கி குறையுமா என கேள்வி எழுப்பியதற்கு தமிழக வெற்றி கழகத்தால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்த அவர் ஓபிஎஸ் சசிகலா நடவடிக்கைகள் குறித்து அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படுமா என கேட்டதற்கு எங்களின் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் இதற்கு பதில் அளிப்பார் எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் என தெரிவித்தார்










