• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்..,

ByKalamegam Viswanathan

Feb 4, 2026

மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார்.

அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு மஞ்சள் குங்குமம் மற்றும் இனிப்புகளை கோவிலுக்கு வந்த பெண்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள்

மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினமான இன்று அன்னை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் செய்து அழகு பார்த்த ஊர் இந்த மதுரை. இந்த ஊரில் மீனாட்சி அம்மனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ அம்மனை சிறப்பு வழிபாடு நடத்தினோம். கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு திருமாங்கல கயிறு புத்தாடை இனிப்பு வழங்கி நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்தோம் என்றார்.