2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அஇஅதிமுகவின் சார்பில் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க,

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை கடைவீதி, காமராஜர் நகர், ஜல்லிக்கட்டு காளை சிலை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று ” விடியா திமுக ஆட்சிக்கு எதிராக, “விடியா ஆட்சிக்கு உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக,
கழக பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நூதன வகை பிரச்சாரம் அனைவரையும் ஈர்த்துள்ளது தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ் மாவட்ட கவுன்சிலர் சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.










