மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்து, மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார். முன்னதாக, அரியலூர் தெற்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், நகர செயலாளர் ஆன்டனிதாஸ், நகர பொருளாளர் சங்கர், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி கௌதமன், மற்றும் ஏராளமான காங்கிரஸ்
நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் நன்றிகூறினார்.முன்னதாக, காமராஜர் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் மாரியம்மாள், உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.







