சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் இருந்து படந்தால் வழியாக சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தரைப்பாலம் உள்ளது. மழை காலத்தில் தரைப்பலத்தில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது சாத்தூரிலிருந்து சுப்ரமணியபுரம், தாயில்பட்டி ,வழியாக சிவகாசிக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆகையால் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் ரூபாய் நான்கு கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சாத்தூர் நெடுஞ்சாலைத் துறையினர் கூறினர்.







