• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஆதி மாசாணி அம்மன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..,

ByKalamegam Viswanathan

Jan 29, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் புடை சூழ எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து பூக்குழிக்காக கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் மாசாணி அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறுசுவை அன்னதானம் நடைபெற்றது . இதில் குருவித்துறை மன்னாடிமங்கலம் காடுபட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்