• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ..,

ByS. SRIDHAR

Jan 28, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் திருவப்பூர் ரயில்வே கேட் மற்றும் கருவேப்பிலையான் ரயில்வே கேட் ஆகிய இரண்டு ரயில்வே கேட்டுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஏற்கனவே ரயில்வே மற்றும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டது தற்போது அதை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ ஆலோசனை நடத்தினார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ
இரண்டு மேம்பாலங்கள் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது முதல் கட்டமாக திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கு முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டது

இதில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ரயில்வே துறை அதிகாரிகளோடு பேசி திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு முடிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது

திமுக காங்கிரஸ் கூட்டணியில் கருத்து சுதந்திரம் உள்ளது

ஆனால் ஒருவருக்கொருவர் கருத்து கூறியது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளது குறிப்பாக மதுரை எம் எல் ஏ தளபதி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் ஜோதிமணி ஆகியோர் இடையே கடும் வார்த்தையை போர் நடைபெற்று வருகிறது

ஆனால் எங்களுடைய ஒரே நோக்கம் தமிழகத்தில் மதவாத சக்திகள் உள்ளே நுழையக்கூடாது என்பது தான்

எனவே இந்த கூட்டணி நீடிக்கும் வலுப்பெறும்

திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் தமிழக முதல்வருக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான விரிசலும் ஏற்படாது இந்தியா கூட்டணிக்குள் தான் காங்கிரஸ் இருக்கும்.

இந்த பிரச்சனையை அனைவரும் கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் மதிமுக நிலைப்பாடு

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்பது தான் எனது கருத்து விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ள கருத்துக்கு வைகோ பதிலடி

தமிழகத்தில் அரசியல் நிலை மாறி மிகவும் மோசமாக போய்க் கொண்டுள்ளது

ஒரே இயக்கத்தில் இருந்தவர்கள் தான் எடப்பாடியும் டிடிவி தினகரன்

கருத்து வேறுபாடுகளை ஏற்பட்டு விருந்தினர் தற்போது கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்று சேர்ந்துள்ளனர் அது அவர்களின் நிலைப்பாடு

வட மாநிலங்களில் பல்வேறு கலாச்சார சீரழிவு படங்கள் திரையிடப்பட்டு தான் வருகின்றன அதற்கு சென்சார் அனுமதி அளித்து தான் வருகிறது ஆனால் ஜனநாயகம் படத்திற்கு அரசியல் உள்நோக்கத்திற்காக சென்சார் கோடு அனுமதி அளிக்கவில்லை.

விஜய்க்கு அடுத்ததை கொடுப்பதற்காக தான் இன்னும் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்கவில்லை.

நான் மதிமுகவின் முதன்மை செயலாளர் மட்டுமே கூட்டணி குறித்து கூட்டணியில் எவ்வளவு சீட்டுகள் பெற வேண்டும் என்பதோ தலைவரை தான் கேட்க வேண்டும் நான் ஏதாவது சொல்லி இங்கிருந்து காரில் புறப்பட்டவுடன் நான் வசை வாங்குவதற்கு என் வாயை பிடுங்காதீர்கள் என்னை ஆளை விடுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தீப்பட்ட சின்னத்தை பெற்று அதில் தான் நிற்பேன் என்று கூறி நின்னு வெற்றி பெற்றேன்

ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தலைவர் மற்றும் கூட்டணி தலைவர் இணைந்து பேசி இதுகுறித்து எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பார்கள்.