நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் நாட்டின் 77 வது குடியரசு தினத்தின்
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து உசிலம்பட்டி கிளைச் சிறை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






