உசிலம்பட்டியில் வசந்த் & கோ நிறுவனத்தின் 145வது கிளையை அதன் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், தங்கமலர் வசந்தகுமார் இணைந்து திறந்து வைத்தனர்.,

வீட்டு உபயோக பொருட்களுக்கான உலகின் நம்பர் 1 டீலர் என பெயர் பெற்ற பழமைவாய்ந்த வசந்த & கோ நிறுவனத்தின் 145 வது கிளையை உசிலம்பட்டியில் துவங்கியுள்ளனர்.,
இன்று இந்நிறுவனத்தின் 145 வது கிளையை அதன் நிர்வாக இயக்குநர்களான தமிழ்ச்செல்வி வசந்தகுமார், தங்கமலர் வசந்தகுமார் இணைந்து ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர்., மதுரை மேற்கு மாவட்ட மற்றும் உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய கிளையை திறந்து வைத்தனர்.,

முதல் நாளிலிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வந்து வசந்த் & கோ கிளையை பார்வையிட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.,
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக இயக்குநர் தங்கமலர் வசந்தகுமார்., உசிலம்பட்டி பாரம்பரியமான பகுதி இந்த பகுதியின் சிறப்பே சீர்வரிசை பொருட்கள் தான், அதை இன்று உசிலம்பட்டி வரும் போதே கண்டேன்., தங்கள் வசந்த் & கோ நிறுவனத்தில் சீர்வரிசைக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைவான விலையில், தள்ளுபடியுடன் கிடைக்கும் என தெரிவித்தார்.,
மேலும் எல்லா பொருட்களும் கிடக்க வேண்டும் என்ற வகையில் பொறுமையாகவும், மக்களுக்கு தேவையானதை வழங்க வேண்டும் என இந்த கிளையை திறந்துள்ளோம் இங்கு வந்தால் அனைத்தும் கிடைக்கும்., திறப்பு விழா சலுகையாக 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவரும் தங்க நாணயம் மற்றும் வந்து பொருட்கள் வாங்கி செல்லும் அனைவருக்குமே நிச்சயபரிசு வழங்கப்பட்டு வருகிறது., உசிலம்பட்டி மக்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.






