• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோட்டாட்சியர் உத்தரவை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்..,

ByS.Ariyanayagam

Jan 22, 2026

கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் கும்பல் அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் மலைகளை உடைக்கும் பாறைகள் வெடிவைக்கும் இயந்திரம்.ஹிட்டாச்சி. ஜேசிபி . போர்வெல் இயந்திரங்கள் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைகளை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்

தற்போது வரை மலைகளை அழிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாறை உடைக்கும் இயந்திரம். ஜேசிபி . ஹிட்டாச்சி .போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மேல்மலை கீழ் மலை பகுதிகளில் இயக்கப்பட்டு வருவதும்

கோட்டாட்சியர் உத்தரவிட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா வட்டாட்சியர். RI .VAO மற்றும் நகராட்சி . ஊராட்சி . வனத்துறை. அதிகாரிகள் என கேள்வி எழுப்புகின்றனர். சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.