பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாவரம் வார சந்தை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா வார சந்தை துணை செயலாளர் முகம்மது உசேன் , தலைமையில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஜாக், பொருளாளர் முகமது யாசின் வரவேற்புரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம் யாக்கூப் மற்றும் கண்டோன்மென்ட் ஆணையாளர் (CO) வினோத் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு உரையாற்றினர்.
பின்னர், வாரச்சந்தை நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். அதனை தொடர்ந்து மனிதநேய வழிகள் சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அனைத்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கண்டோன்மென்ட் ஆணையாளர் (CO) வினோத் விக்னேஸ்வரன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டை போற்றும் வகையில் அனைவரும் முன்னணியில் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தனர்,
மேலும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ். கே .ஜாகிர் உசேன் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சர்புதீன்,
பழைய பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார்
மற்றும் வாரச்சந்தை நிர்வாகிகள் வேல்முருகன் , சேக் அலாவுதீன், சையது நவாப்தீன், சாரதி, மஜீத், அப்துல் வாய்து,முருகன் அப்துல் சலீம், சர்தார், ஜாகிர் உசேன், சாமிதுரை, பாலாஜி, அப்துல் ஜாஃபர், அயுப், சாகுல் ஹமீத், ஜிவி சைக்கிள் கடை உட்பட மனிதநேய வணிகர் சங்கம் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





