திண்டுக்கல் சிறுமலையில் குதிரை பொங்கல் கொண்டாட்டம் நடந்ததது.
திண்டுக்கல் சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். தாங்கள் விவசாயம் செய்ய உதவி புரியும் குதிரைக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைப்பொங்கல் விழா சிறுமலை மலைகிராமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குதிரைகளை குளிக்க வைத்து, திலகம் இட்டு அவற்றிற்கு முன் பொங்கல் வைத்து மலைக்கிராம மக்கள் வழிபட்டனர். பின்னர் குதிரைகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டு தங்கள் நன்றிக்கடனை செலுத்தினர். குதிரைகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.





