• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியான நடவடிக்கை..,

கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*

  • இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு அருகே வியாகுல மேரி என்கிற வயது 85 மூதாட்டி அவர்களுக்கு ஒரு மகள் இறந்து விட்டநிலையில், மற்றொரு மகள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
  • இதனால் கவனிப்பாரன்றி மூதாட்டி தனிமையில் அவதிப்பட்டார்.
  • மூன்று நாட்கள் வீட்டினுள் இருந்த மூதாட்டி பசியினால் சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.
  • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குளச்சல் உட்கோட்ட நிமிர் குழுவினற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
  • நிமிர் குழு ஊர்மக்கள் உதவியுடன் மூதாட்டியை மீட்டு, மேக்காமண்டபம் பகுதியில் செயல்படும்
  • கிறிஸ்த்தவ அருட்கன்னியர்கள்
  • நடத்தும் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
  • ஆதரவற்றிருந்ந
  • மூதாட்டி ஒரு பாதுகாப்பான கரங்களில்
  • இருப்பதை உணர்ந்து
  • மன அமைதி பெற்றாள்.