• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழைய இரும்பு குடோன் தீ விபத்து..,

BySeenu

Jan 16, 2026

கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் பொருட்கள் மற்றும் தகரம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அந்த கடையில் மின்சார கசிவு காரணமாக தீ பற்றி உள்ளது அந்த தீயானது மலமலவென அங்கிருந்த குடோனில் இருந்த பழைய பொருட்கள் எரிந்து நாசமாகின. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மத்திய தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் அங்கு வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.