தமிழர் திருநாளாம் தை திங்களை (நேற்று வியாழன்) முன்னிட்டு விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விருதுநகர் MLA ARR சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவிற்கு வந்த அனைவருக்கும் MLA ARR சீனிவாசன் பொங்கல் வழங்கினார். விருதுநகர் சேர்மன் மாதவன் பிளாஸ்டிக் வாளி வழங்கினார். MLA ARR சீனிவாசன் அவர்களுக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் K M குமார் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொங்கல் விழாவில் சேர்மன் சுப்பாராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் KG ராஜகுரு, நகர அவை தலைவர் காசிராஜன், நகர துணை செயலாளர் ASK ரமேஷ்குமார், ஓட்டுநர் அணி திருமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பொங்கல், பிளாஸ்டிக் வாளி வாங்குவதற்கு திமுக தொண்டர்கள் முண்டியடித்து கொண்டதை பார்த்த கழக முன்னோடி ஒருவர் பொங்கல்,மற்றும் வாளி இவற்றிற்காக இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறியபடி சென்றார். விழாவிற்கு வந்த பெண்மணி ஒருவர் என்ன நினைத்து வந்தாரோ தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து சென்றார்.






