• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக புறமுகர் வீட்டில் கஞ்சா செடி பாஜக போலீசில் புகார்..,

ByS.Ariyanayagam

Jan 14, 2026

திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது.

திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டதை உறுதி செய்தனா். மேலும் அந்த செடி புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, திமுக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் தனபாலன் கூறியதாவது::
திண்டுக்கல்லை அடுத்த தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகா் ஒருவரின் வீட்டில் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக பிரமுகா் என்பதால், அவரது வீட்டின் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளா்ந்திருப்பதாக கூறி, அலட்சியமாக செயல்பட்டுள்ளனா். போதை கலாச்சாரத்த வழிநடத்தும் திமுகவினருக்கு, காவல் துறையும் துணை நிற்பது அதிா்ச்சி அளிக்கிறது, என்றாா்.