குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா ஓணம் பண்டிகைக்கு இணையான ஒரு மக்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது.

திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனரும் ஆன
பி.டி செல்வகுமார் கடந்த 12_ ஆண்டுகளாக. கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ‘ரஸ்தா காடு’ கடற்கரையில் பொங்கல் விழா நடத்திவருகிறார்.
வசந்தகுமார் 12_ ஆண்டுகளுக்கு முன்பு. ரஸ்தா காடு கடற்கரையில் 102 பானைகளில் பெண்களின் முதல் பொங்கலை தொடங்கி வைத்தது மட்டும் அல்ல. 102 புதிய அலுமீனியம் பானைகளை அவரது அன்பளிப்பாக வழங்கினார்.

கால ஓட்டத்தில். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக வசந்தகுமார் இந்த பொங்கல் விழாவில் தொடர்ந்து பங்கேற்றார்.
கன்னியாகுமரி மக்களவையின் இன்றைய உறுப்பினரான வசந்தகுமாரது மகன்
விஜய் வசந்த். தந்தை வழியில் ஆண்டு தோறும். பி.டி. செல்வகுமார் நடத்தும் பொங்கல் விழாவில் தேவைப்படும் புதுப் பொங்கல் அலுமீனியம் பானைகளை தந்தை வழியில் தனையன் விஜய் வசந்த் வழங்குவது ஒரு வாடிக்கையான செயலாக தொடரும் நிலையில்.
இவ்வாண்டு பொங்கலில் பொங்கல் இட பெண்கள் அதிக எண்ணிக்கையில்
விருப்பம் தெரிவித்தார்கள். ரஸ்தா காடு பொங்கல் விழாவில் இவ்வாண்டு.3006.
பானைகளில் பொங்கலிடுவது என முடிவான நிலையில். தந்தை வழியில், தனயன்
3006.புதுப் பானைகளை விஜய் வசந்த் அவரது பொங்கல் பரிசாக தாய்மார்களுக்கு வழங்கியதோடு விழாவிலும் பங்கேற்றார்.

பொங்கல் விழா காண பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளை, இந்த விழாவில் பங்கேற்க. தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் கன்னியாகுமரி தலைமை நிர்வாகி காமராஜ் மற்றும், கன்னியாகுமரி சுற்றுலா காவலர்கள்
பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இந்த நிகழ்வில் பங்கேற்க
அழைத்து வந்தனர்.
இவ்வாண்டு பொங்கலில் சிறப்பு விருந்தினர்களாக. தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,சாமிதோப்பு அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை தேவயானி, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆகியோர்.பி.டி.செல்வகுமாரின் தொடர் முயற்சிகளை பாராட்டினார்கள்.
பொங்கல் இட்ட பெண்கள்.3006 பேருக்கும். புடவை மற்றும் செங்கரும்பு
பொங்கல் பரிசாக வழங்கினார்கள். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




