திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெத்தன். இவரது மகன் முருகன் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் உள்ள பாண்டீஸ்வரி முருகனின் வீட்டில் அனுமதி இல்லாமல் கொடியை கட்டி உள்ளார்.
கொடியை கட்டியுள்ளனர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்காமல் கட்டி உள்ளதால் வீட்டில் கட்டிருந்த கொடியை முருகன் அவிழ்த்து உள்ளார் இதையடுத்து முருகனுக்கு தொலைபேசியில் அழைத்த த வெக கட்சியை சேர்ந்த பாண்டீஸ்வரி கொடியை யாரைக் கேட்டு அவிழ்த்தாய் கொடிய அவிழ்ப்பதற்கு முன் என்னிடம் கேட்டிருக்க வேண்டும் எனக் கூறி ஆபாசமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மேலும் அவரது ஜாதியை சொல்லியும் திட்டி உன்னையும் உனது தந்தையையும் செருப்பால் அடிப்பேன் ஊருக்குள் வந்து பார் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து பட்டியலின சமுதாய மக்களை அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியமல்லனம்பட்டி பகுதியில் பாண்டீஸ்வரி மற்றும் அவரது மகன்கள் இருவரும் மிரட்டுவதும் ஜாதியை சொல்லி திட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் முருகன் புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




