தஞ்சை அடுத்தபட்டுக்கோட்டையில் ரூபாய் 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது – எம்.எல்.ஏ, சேர்மன் தொடங்கி வைத்தனர்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 3,000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரூ 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு இன்று வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காசாங்குளம் பகுதியில் உள்ள 4 ஆம் நம்பர் ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூபாய் 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இன்று ரூபாய் 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.




