கோயமுத்தூர் (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ) சார்பில் ‘ஃப்ளோ கேலரியா’ என்ற ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி கோவையில் துவங்கியது. கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் – தி பால்ரூம் அரங்கில் இந்தக் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது

பெண்களால் நடத்தப்படும் தொழில்முனைவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஃப்ளோ கேலரியாவில், நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் பிரத்யேக அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் உயர்தர ஆடைகள், நேர்த்தியான நகைகள், துணைப் பொருட்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறை சார்ந்த தயாரிப்புகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஃப்ளோ கேலரியா மற்றும் புரொமனேட் ஆகிய இரு பகுதிகளிலும் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் பேசிய ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் கோவை தலைவர் டாக்டர் அபர்ணா சுங்கு, “ஃப்ளோ கேலரியா என்பது ஆடம்பரக் கண்காட்சி மட்டுமல்ல, வணிகமும் சமூக நோக்கமும் இணையும் ஒரு பயனுள்ள தளமாகும் என்றார். இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானம் அடித்தட்டு நிலையில் உள்ள பெண்களின் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.




