உசிலம்பட்டியில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,

தேசிய பறவைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில்தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் நல்லுத்தேவன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பள்ளியில் துவங்கிய இந்த பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பதாதைகளை எந்தியபடியும், பறவைகளை பாதுகாக்க கோசங்களை எழுப்பியும் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.




