சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வடக்கு பகுதி திமுக கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அப்பகுதியை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களான கைப்பந்து கால்பந்து கபடி உடைகள் கேரம்போர்டு கிரிக்கெட் பேட் பந்து ஸ்டம்ப் பாக்ஸிங் ஹெல்மெட் கிளவுஸ் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஆயிரம் நபர்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டது
அதுமட்டுமின்றி பல்லாவரம் பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது அப்போது மாமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் காலில் விழுந்து வணங்கி பரிசுகளை வாங்கிச் சென்றனர்…

அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் தா மோ அன்பரசன்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாடு முழுவதும் இயக்கத் தோழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
உதயநிதி ஸ்டாலின் தற்போது பிரம்மாதமாக பேச துவங்கி விட்டார்
இந்தியாவில் இருக்கும் தலைவர்களும் உதயநிதியை பற்றி பேசுகிறார்கள் உதயநிதியும் அவர்களை பற்றி பேசும் அளவிற்கு அரசியலில் வளர்ந்து விட்டார் வரும் தேர்தலில் தமிழகத்தில் ஒரு ரவுண்டு வந்தால் போதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடுகிறார்கள்
அதனால் நாம் யாரும் பயப்படத் தேவையில்லை அவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நம்மையும் இந்த நாட்டையும் வழிநடத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்
இன்று கட்சி ஆரம்பித்தவன்(விஜய்) எல்லாம் அவனுக்கும் நமக்கும் தான் போட்டி என கூறுகிறான் எவ்வளவு பெரிய சோதனை எல்லாம் பார்த்த கட்சி நமது கால் தூசுக்கு சமம் அவன் எல்லாம் என விஜய்யை மறைமுகமாக சாடினார்,
பார்க்கதானே போறோம் சிபிஐ வேண்டும் சிபிஐ வேண்டும் என கேட்டார்கள் சிபிஐ போட்டுக் கொடுத்து விட்டார்கள் இப்போது டெல்லியில் போய் இருக்கிறார்கள் மரியாதையாக எங்களுடன் கூட்டணி வாருங்கள் இல்லையென்றால் தோலை உரித்து விடுவோம் என டெல்லி கூறும்,

அடுத்த வாரம் விஜய்க்கு சம்மன் வரப்போகிறது அவரும் டெல்லிக்கு செல்வார் முதலில் எங்களுடன் கூட்டணிக்கு வா என பாரதிய ஜனதா கட்சி கூறும் பாருங்கள் இன்னும் 10 நாளில் என்னென்ன நடக்கப் போகிறது,
இசிஆர் ரோட்டில் அமித்ஷா வீடு எடுத்து இருக்கிறாராம் தேர்தல் வேலை பார்ப்பதற்கு எவன் எவனையோ பார்த்து விட்டோம் இதை பார்க்க மாட்டோமா
நாம் இறங்கி வேலை பார்த்தால் நம்மளை எதிர்ப்பதற்கு எவனுக்கும் தைரியம் இருக்காது என இவ்வாறு பேசினார்.




