• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீயசக்தி தி.மு.க. அல்ல விஜய்-பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரியை அடுத்த இலந்தையடி விளையில் உள்ள. தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு.திரைப்பட தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான, அண்மையில் சென்னையில்.தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார், அவரது சொந்த செலவில் கலையரங்கம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி கொடுத்தார்.

புதிய கலையரங்கத்தினை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக தலைவருமான மகேஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.டி.செல்லகுமார் செய்தியாளர்களிடம். தி.மு.க.வை தீயசக்தி என சொல்லும் விஜய்தான் உண்மையிலே ஒரு தீயசக்தி. அவரை வைத்து முதல் படத்தை எடுத்த சேவியர் பிரிட்டோவின் ஆடியோ வெளியீடு விழாவில் பங்கேற்காது ஒதுங்கிக்கொண்டவர்.

அவரது தாய் மாமா சுரேந்திரன்,பல திரைப்படதயாரிப்பாளர்கள். என்னை போன்று அவரது திரைப்பட அறிமுகம் காலத்தில் உடன் இருந்தவர்கள். அவரது மன்றத்திலிருந்த, தூத்துக்குடியை சேர்ந்த பெண் அஜிதா. அவரது காரை மறித்து நியாயம் கட்டபோது. காரை நிறுத்தாது.பவுன்சர்களை கொண்டு அஜிதாவை தடுத்தது. இத்தகைய செயல்கள் தான் தீய சக்தியின் அடையாளம்.

கரூருக்கு குறித்து நேரத்தில் வாராது 7_மணி நேரம் காலம் கடத்தி வந்ததால். நம்முடைய சகோதர, சகோதரியின் 41_பேர் மரணத்திற்கு காரணமான விஜய், அவருடன் இருக்கும் புசிஆனந்த், நிர்மல் குமார்,ஆதவ்அர்ஜின் ஆகியோர்கள் தான் உண்மையான தீயசக்திகள் என திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் குற்றம் சாட்டினர்.