விருதுநகர் மாவட்டம் மதுரை-கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது விருதுநகர் ஆர்.ஆர் நகர் அருகே சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
வாகனத்தில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன.
இந்த விபத்தில் டிரைவர் சுதாகர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

உடனடியாக தகவல் அறிந்து வச்சகாரப்பட்டி போலீஸார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விபத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் வாகனத்தை அகற்றினர். மேலும் சாலையில் உடைந்து கிடந்த முட்டையால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போது சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.





