புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த முருகராம் திடலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காய்கறிகள் வார சந்தை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வார சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்ததால் தற்காலிகமாக வேளாண் விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதால் மீண்டும் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பிஜேபி செயலாளர் துரை சேனாதிபதி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு நிதியில் இருந்து வார சந்தைக்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்தார்.




