புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் மணிவண்ணன் துணைத் தலைவர் செந்தில்வேல் பொதுச் செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற திட்ட இயக்குநரும் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவருமான ஏவிசிசி கணேசன் சிறப்பு அழைப்பாளராக் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது,கபடி மற்றும் ஓட்டப் பந்தயங்களில் சிறந்து விளங்கும் கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, மூத்த குடிமக்களுக்கு ரயில்வே துறை வழங்கிய சலுகைகளை மீண்டும் வழங்குவது,
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீண்டும் அமைப்பது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற இணை இயக்குநர் அழகிரிசாமி அனைவரையும் வரவேற்றார்.

சங்கச் செயலாளர் பிடிஓ கண்ணன் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் சின்னப்பா நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் துணை வட்டார வளா்ச்சி அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற உதவி இயக்குனர்கள் ஒன்றிய ஆணையர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈப்பு ஓட்டுநர்கள் விசைப்பம்பு இயக்குநர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




