மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியான மேட்டுநீரேத் தான் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் பிரகாஷ் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி கவுன்சிலர் ஜெயகாந்தன் இளைஞரணி வினோத் தகவல் தொழில் நுட்ப அணி அரவிந்தன் போஸ் பாலமுருகன் அருண் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி மற்றும் மேட்டு நீரேத் தான் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 600க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது.




